தாஜ்மகால் சுவரைத் தொட்டுச் செல்லும் வெள்ளம்

1 mins read
efad20df-a42c-46de-b2db-4c4f00c41564
யமுனை ஆற்றின் வெள்ளம் காரணமாக 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மகாலின் சுவர்களைத் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடுகிறது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மகாலின் சுவர்களைத் தொட்டுக்கொண்டு யமுனை ஆற்றின் வெள்ள நீர் செல்கிறது.

உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை கொட்டியது.

கங்கை, யமுனை ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் டெல்லியில் மீண்டும் பலத்த மழை பெய்தது.

இதனிடையே, ஜம்மு, காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக புதன்கிழமை எட்டுப் பேர் உயிரிழந்தனர். ஜம்மு, காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலைப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்