தெலுங்கானாவில் சிறுபான்மையினர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

தெலுங்கானாவில் சிறுபான்மையினர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

1 mins read
afdf7111-1b41-4eb7-b362-b91e5d58ad14
தெலுங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, ஜைன, புத்த, பாரசீக மதங்களைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினருக்கும் சிறுபான்மையினர் நலவாரியத்தின் மூலம் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

சிறுபான்மை இனத்தவர் கல்வி, பொருளாதார ரீதியாக சமூகத்தில் வளர்ச்சிபெற வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கானா மாநில அரசு இந்த நிதி உதவியை அளித்து வருகிறது என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகால எங்கள் ஆட்சியில் ரூ.8,581 கோடி சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்