ஹைதராபாத்: தெலுங்கானாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள முலுகு மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காட்டாற்று வெள்ளத்தில் கிக்கிக் கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், அசாம், டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்போது தென்னிந்தியாவில் தென்மேற்குப் பருவமழை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள முத்யம்தரா நீர்வீழ்ச்சியைக் கண்டுகளிக்க அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அங்கு தொடர்ந்துபெய்து வரும் கனமழையால் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சுற்றுலாப் பயணிகள் சிலர் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்களை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். இதை தெலுங்கானா காட்டுவளத் துறை உறுதிசெய்தது.

