அமித்ஷா, பிரியங்கா காந்தி தெலுங்கானா பயணம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து

1 mins read
a8c22d8e-764f-47fe-a0a2-5190c63745e2
அமித்ஷா, பிரியங்கா காந்தி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரின் தெலுங்கானா பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் என்.பி.சுபாஷ் வெளியிட்ட அறிக்கையில், தவிர்க்கமுடியாத காரணங்களால் ஜூலை 29ஆம் தேதி நிகழவிருந்த அமித்ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

அதேபோல, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான மல்லு ரவி கூறுகையில், கனமழை காரணமாக கொல்லப்பூரில் ஜூலை 30ல் பிரியங்கா காந்தி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

பிரியங்கா முன்னிலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் காங்கிரசில் சேர இருந்தார். 

மேலும், இந்தக் கூட்டத்தில் தெலுங்கானாவுக்கான கட்சியின் மகிளா பிரகடனத்தை பிரியங்கா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் வியாழக்கிழமை தொடர்ந்து பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்