சென்னை: சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி, 200 நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடி அசத்தியிருக்கிறார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவியான சுபிஷா, 200க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த மொழிகளில் பாடி உலக சாதனைப் படைத்து பிரமிக்க வைத்துள்ளார். நேற்று சுபிக்ஷாவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது ஜப்பான், வியட்னாம், வத்திகன் ஆகிய நாடுகளின் தேசிய கீதங்களை அவர் பாடிக் காட்டினார். இதைப் பார்த்து சுபிஷ்காவை அமைச்சர் பாராட்டினார். எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆவதே தனது இலக்கு என்று சுபிக்ஷா தெரிவித்துள்ளார்.

