எண்ணெய்க் கொள்கலன் மீது சொகுசுக் கார் மோதி 2 பேர் பலி

எண்ணெய்க் கொள்கலன் மீது சொகுசுக் கார் மோதி 2 பேர் பலி

1 mins read
45e8b56a-bbc7-44bb-888e-e010bd4bf7eb
-

புதுடெல்லி: சொகுசுக் கார் ஒன்று புதுடெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஹரியானாவில் நூஹ் பகுதியில் எண்ணெய் ஏற்றி வந்த கொள்கலன் வாகனம் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.

படுவேகத்தில் வந்த அந்தச் சொகுசுக்கார் எண்ணெய்க் கொள்கலன் வாகனத்தின் மீது மோதி நசுங்கியது. இந்த விபத்தையடுத்து எண்ணெய்க் கொள்கலன் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் இருந்த ஓட்டுநரும் அவருடைய உதவியாளரும் அந்தத் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நல்லவேளையாக காரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிர் பிழைத்தனர். அவர்கள் கடுமையான காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்