தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவில் உலவி இந்தியச் சின்னத்தைப் பொறித்த ‘ரோவர்’

1 mins read
8fc859ab-c008-42d9-a927-b400edd2b034
‘ரோவர்’ பதித்த இந்தியச் சின்னமும் இஸ்ரோ சின்னமும். - மாதிரிப்படம்

புதுடெல்லி: நிலவிற்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்த இந்தியா, இப்போது தனது சின்னத்தையும் அங்கு பொறித்து முத்திரை பதித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் இறங்குகலம் (லேண்டர்) இம்மாதம் 23ஆம் தேதி புதன்கிழமை மாலையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

அதனைத் தொடர்ந்து, அந்த இறங்குகலத்துடன் பொருத்தப்பட்டிருந்த ‘பிரக்யான்’ உலாவூர்தி (ரோவர்) வியாழக்கிழமையன்று நிலவின் தரைப்பகுதியில் இறங்கி, உலா சென்ற காணொளியை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

உலாவூர்தியின் பின்சக்கரங்களில் இந்தியாவின் நாற்சிங்கச் சின்னமும் இஸ்ரோ சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வூர்தி நிலவின் தரைப்பகுதியில் உலவியபோது, அச்சின்னங்களின் தடங்களும் அதில் பதிந்திருக்கும்.

ஆயினும், இது குறித்து படங்கள் எதையும் இஸ்ரோ வெளியிடவில்லை என்றபோதும் உலாவூர்தியின் பின்சக்கரங்களில் தேசியச் சின்னமும் இஸ்ரோ சின்னமும் பொறிக்கப்பட்டிருந்ததை முன்னர் வெளியான படங்கள் காட்டின.

நிலவில் தரையிறங்கிய பிறகு இறங்குகலமும் உலாவூர்தியும் ஒரு நிலா நாளுக்குச் செயல்பாட்டில் இருக்கும். நிலவில் ஒரு நாள் என்பது புவியில் 14 நாள்களுக்குச் சமம்.

குறிப்புச் சொற்கள்