‘செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கும் விண்கலம் அனுப்பும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது’

‘செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கும் விண்கலம் அனுப்பும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது’

1 mins read
26eb7fc2-1bb2-45e3-9e73-473f20b70b36
இஸ்ரோ தலைவர் சோம்நாத். - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாட்டுத் தலைவர்களுடன் அண்டை நாடான பாகிஸ்தான் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ அமைப்பின் தலைவர் சோம்நாத், நிலவுக்கு மட்டுமல்ல, செவ்வாய், வெள்ளிக் கிரகங்களுக்கு இந்தியா விண்கலம் அனுப்பும். அந்த ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. விண்வெளித்துறை வளர்ச்சியடைய அதிகமான முதலீடுகள் தேவைப்படுகிறது. அதன்மூலம் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடையும் என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்