சத்ரபதி சிவாஜியின் அரிய உருவச் சிலை இந்தியாவுக்கே திரும்புகிறது

1 mins read
8e430b37-4396-4225-ad3b-a8cddf6f15dd
இந்தியாவுக்குச் சொந்தமான சத்ரபதி சிவாஜியின் அரிய உருவச் சிலை பிரிட்டனிடம் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: இந்திய ஊடகம் 

புதுடெல்லி: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் அரிய கலை உருவம் பிரிட்டனிடம் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என மத்திய கலாசார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

அந்த அரிய கலைப் பொக்கிஷம் இந்தியாவிற்கு மீண்டும் கிடைக்கவிருக்கிறது. அது இந்தியாவின் அரசதந்திர முயற்சிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று அமைச்சு சனிக்கிழமை எக்ஸ் இணையத்தளத்தில் தெரிவித்தது.

நம்முடைய பழைய பாரம்பரியம் திரும்புகிறது. சத்ரபதி சிவாஜியின் அரிய வரலாற்று முக்கிய உருவச்சிலை, அது தோன்றிய இடத்திற்கே மீண்டும் திரும்புகிறது.

இதன்மூலம் இமாலயச் சாதனை படைக்கப்படுகிறது என்று அமைச்சு குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தியா வரலாற்றை மீண்டும் பெறுகிறது என்ற முழக்க வாசகத்துடன் கூடிய ஒரு பதாகையையும் அமைச்சு அந்த இணையத்தளம் மூலம் பகிர்ந்துகொண்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்