கழுதை இனத்தைப் பெருக்க உதவுக; விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

கழுதை இனத்தைப் பெருக்க உதவுக; விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

2 mins read
968b543c-9a08-40bd-a613-1b5ac5ec3389
தமிழ்நாட்டில் இப்போது வாழ்கின்ற கழுதைகளின் எண்ணிக்கை 500கூட இருக்காது என்று விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.   - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்தியாவில் இதர மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் அந்த இனத்தைப் பெருக்க உதவும்படி தமிழக அரசுக்கு விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி மொத்தம் 1,983 கழுதைகள்தான் இருந்தன என்பது தெரியவந்தது.

அந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில்1,428ஆகக் குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 2019க்குப் பிறகு கழுதைகள் கணக்கெடுக்கும் பணி இன்னமும் நடக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்போது உயிரோடு இருக்கும் கழுதைகளின் எண்ணிக்கை 500 கூட இருக்காது என்று விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

எஞ்சி இருக்கும் கழுதைகளும் மணல் கடத்தல் போன்ற சட்டவிரோதக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்க அது பெரிதும் பயன்படுகிறது. இதனால் கழுதைப் பாலுக்கு அதிகமாக தேவை இருக்கிறது.

கழுதைகளை வளர்ப்பது குதிரைகளை வளர்ப்பதைவிட செலவு சிக்கனமானது என்பதை எல்லாம் விலங்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ. உயரம் வரை வளரும். கழுதைகள் மிதமான பாலை நிலங்களில் வாழவல்லவை. பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ. உயரம் வரை இருக்கின்றன.

கழுதை சாதுவானது, சகிப்புத்தன்மைமிக்கது. தாக்கப்பிடிக்கும் திறன் அதற்கு அதிகம். கழுதைக்கு பஞ்சகல்யாணி என்ற பெயரும் உண்டு.

குதிரைகளைப் போலவே கழுதைகளும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை.

குறிப்புச் சொற்கள்