தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

1 mins read
6332907c-cde0-4ecd-b8e6-fb741b055e73
iஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகமாகிறது.

இத்திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள தெலுங்கானா அரசு அதிகாரிகள் அண்மையில் சென்னை வந்திருந்தனர். அப்போது தமிழக அரசு அதிகாரிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் குறித்து விரிவான தகவல்களை அளித்தனர்.

இதையடுத்து, தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 24 முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நவராத்திரி பரிசாக ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகமாகும் என்றும் இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவிடப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்