புதுடெல்லி: உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஏமனில் சிக்கியிருந்த 18 இந்திய மாலுமிகள் பத்திரமாக இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவு அமைச்சு மேற்கொண்டது.
இதன் பலனாக 18 இந்திய மாலுமிகளும் நாடு திரும்பியுள்ளனர்.
‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏமனில் சிக்கியிருந்த 18 இந்திய மாலுமிகள் மத்திய வெளியுறவு அமைச்சு மற்றும் இந்திய தூதரகங்களின் விடாத முயற்சியால் மீட்கப்பட்டனர்,” என்று மும்பையின் வட்டார கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்தது.
கடந்த சில வாரங்களாக ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் மாலுமிகள் சிக்கியிருந்ததாக அலுவலகம் கூறியது.
வெள்ளிக்கிழமை 18 மாலுமிகளும் தலைநகர் ஏடனுக்கு அழைத்து வரப்பட்டு சனிக்கிழமை அவர்கள் விமானம் மூலமாக மும்பை வந்து சேர்ந்தனர்.


