150 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில்

150 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில்

1 mins read
472fa85a-425d-4993-9e68-57bd849d1cf7
படம்: - ஐஎஎன்எஸ்

கோல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியாவில் உள்ள ஒரு பள்ளியில் கிட்டத்தட்ட 150 மாணவர்கள் உடல்நலக் கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பள்ளி இருக்கும் இடம் மேற்கு வங்கத்திற்கும் பீகார் மாநிலத்திற்குமான எல்லையில் உள்ளதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை அன்று மாணவர் விடுதியில் இரவு உணவு உண்ட பிறகு மாணவர்கள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நச்சுணவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மாணவர்கள் வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

உணவில் பல்லி விழுந்ததாக மாணவர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்கள் இரண்டு நாள்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்