விரைவில் கேரளா-துபாய் கப்பல் சேவை

விரைவில் கேரளா-துபாய் கப்பல் சேவை

1 mins read
8c8fbed1-13b7-4e41-b0a0-24abbfa83237
இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கப்பல் மூன்று நாட்களில் கடக்கும். ஒவ்வொரு பயணியும் தங்களுடன் 200 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லாம். கப்பலில் 1,250 பயணிகள் பயணிக்கலாம். - மாதிரிப்படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் கேரள மாநிலத்திற்கும் மத்திய கிழக்கு நாடான துபாய்க்கும் இடையில் விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநில வெளிநாடு வாழ் மக்கள் அமைச்சகமும் அனந்தபுரி ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இந்தச் சேவையை வழங்க உள்ளன.

இந்திய அரசின் அனுமதிக்காக திட்டம் காத்திருக்கிறது.

அனுமதி கிடைத்துவிட்டால் சோதனை ஓட்டம் நவம்பர் மாதம் நடக்கும் என்றும் முழுமையான பயணிகள் போக்குவரத்து சேவை டிசம்பர் மாதம் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை அந்தக் கப்பல் மூன்று நாட்களில் கடக்கும்.

ஒவ்வொரு பயணியும் தங்களுடன் 200 கிலோ வரை பொருள்களை எடுத்துச் செல்லலாம். கப்பலில் 1,250 பயணிகள் பயணிக்கலாம்.

கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவின் கொச்சி, பேஃபோர் துறைமுகங்களில் இருந்து கப்பல் போக்குவரத்து இயக்கப்படும்.

மூன்றாவதாக விழிஞசம் துறைமுகத்தைப் பயன்படுத்துவது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்