சிக்கிம் வெள்ளத்தில் சிக்கிய 400 சுற்றுலாப் பயணிகளை மீட்டது ராணுவம்

1 mins read
d947c56e-c11f-4a5a-aa99-b762103dfb03
இங்கு ராணுவம், விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பில் ஏற்பட்ட கனமழை காரணமாக தீஸ்தா நதியில் கடந்த வாரம் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் சேதம் அடைந்தன. இதில் 10 ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த நிலையில் 105 பேரை காணவில்லை.

இங்கு ராணுவம், விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்கிமில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த 2 நாள்களாகப் பார்வையிட்டார்.

விமானப் படையில் உள்ள எம்ஐ-17 மற்றும் சினுக் ரக ஹெலிகாப்டர்கள், வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் 354 பேரை மீட்டு பாக்யாங் விமான நிலையம் கொண்டு வந்தது. லாச்சென் பகுதியிலிருந்து 45 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் ஹெலிகாப்டர்களில் மீட்டு மங்கன் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

குறிப்புச் சொற்கள்