எச்ஐவி நோயாளியை அறைந்த இந்திய மருத்துவர் பணியிடைநீக்கம்

1 mins read
fd0b5630-23e8-4f15-9063-b541e1a9a1a2
சம்பவம் பதிவான காணொளியிலிருந்து காட்சிகள். - படங்கள்: @INDIAN__DOCTOR / X

இந்தூர்: இந்தியாவில் எச்ஐவி நோயாளி ஒருவரை மீண்டும் மீண்டும் அடித்த இளம் மருத்துவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பதிவான காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டுள்ளது. தனக்கு எச்ஐவி கிருமித்தொற்று ஏற்பட்டதை நோயாளி தெரிவிக்காததால் அவரை மருத்துவர் அடித்து அதட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயது நோயாளியை அடித்த அந்த மருத்துவரை டாக்டர் ஆகா‌ஷ் கெ‌ள‌ஷல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் அடையாளம் கண்டுள்ளது.

இச்சம்பவம் இந்தூர் நகரில் உள்ள அரசாங்கம் நடத்தும் மகாராஜா ‌யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் நிகழ்ந்தது.

சாலை விபத்தில் கால் எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட நோயாளி சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்தம் போன்றவற்றின் வாயிலாக ஹெச்ஐவி கிருமி பிறருக்குப் பரவக்கூடும்.

நோயாளி அதற்கு ஆளானதைத் தெரியப்படுத்தாததால் டாக்டர் ஆகா‌ஷ் கோபம் கொண்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.

எச்ஐவி கிருமித்தொற்று, எய்ட்ஸ் நோய்க்கு வழிவிடக்கூடியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்