டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம்

1 mins read
a8933baa-9336-4f2d-af06-017e9d4b3525
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தின் அருகே குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி மகாத்மா காந்தியின் நினைவிடத்தின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணையைப் புறக்கணித்து விட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷவர்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்குமார் திவாரி, டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி உள்ளிட்ட பாஜகவினர் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்