ராய்கட்: மகாராஷ்டிரா மாவட்டத்தில் மகத் பகுதியில் உள்ள மருந்து ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆலையில் தீ பரவியது. இதன் காரணமாக வேதிப்பொருள்கள் மற்றும் எளிதில் வெடிக்கக்கூடிய பொருள்களிலும் தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர் என்றும் 11 பேரைக் காணவில்லை என்றும் முதற்கட்டத் தகவல்கள் கூறின.
இந்நிலையில், ஆலையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு மூன்று உடல்கள் மீட்கப்பட்டன.
சனிக்கிழமையன்று மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து, மாண்டோர் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.
இன்னும் மூவரைத் தேடும் பணி தொடர்கிறது.