தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாநிலக் கட்சிகளே இனி ஆதிக்கம் செலுத்தும்: சந்திரசேகர ராவ்

1 mins read
ae3513aa-ee3f-4d36-8ad3-e5992119f39c
தெ​லுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் - படம்: இந்திய ஊடகம்

இந்தியாவில் இனி மாநில​க் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று தெ​லுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

தெ​லுங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற்ற தேர்தல் ​பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே தெ​​லுங்கானா மாநிலம் உருவாக போராட்டம் நடத்தவில்லை. அதன் வளர்ச்சிக்காகவும் ​அவை எதுவும் செய்யவில்லை.பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக் காலத்தில்தான் தெ​லுங்கானா பெரும் வளர்ச்சியை சந்தித்தது என்று கூறினார்.

“எனது உயிர் உள்ளவரை தெ​லுங்கானா மதசார்பற்ற கொள்கை உ​டைய மாநிலமாகவே நீடிக்கும். இந்தியாவில் இனி மாநில​க் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்,” எ​ன்றும் அவர் தெரிவித்தார்.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெ​லுங்கானா ​மாநிலச் சட்டசபைக்கு ​ந​வம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்