ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும் பாரதிய ராஷ்டிரிய சமிதிக் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் வியாழக்கிழமை காலையில் சித்திப்பேட்டை மாவட்டத்தின் கஜ்வேல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு அவர் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் அவருக்கு வலுவான ஆதரவு இருந்து வருகிறது.
இந்த தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது 19,391 வாக்குகள் வித்தியாசத்திலும் 2018 ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் 58,290 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் அவர் காமாரெட்டி மாவட்டத்தின் காமாரெட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். சந்திரசேகர ராவ் முதல்முறையாக இரண்டு பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
முதல்வரின் மகனும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி. ராமாராவ் வெள்ளிக்கிழமை காலை சிரிசில்லா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். முதல்வரின் மருமகன் ஹரீஷ்ராவ், சித்திப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தெலுங்கானா முழுவதும் சனிக்கிழமையன்று வேட்பாளர்கள் ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
மனுத்தாக்கலின் போது அவர் அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டம் பெற்ற ஒரு விவசாயி. விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.44 கோடி வருமானம் வருகிறது. ஆனால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.
தொடர்புடைய செய்திகள்
ரூ.17 கோடி கடன்
தனது பெயரில் அசையா சொத்துகள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துகள் உள்ளன. ஆனால், கடன் ரூ.17 கோடியைத் தாண்டிவிட்டது.
ஆண்டு வருமானம் ரூ.1.60 கோடி
பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார். மார்ச் 31ஆம் தேதி ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் தனது தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.