ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் சித்தி பேட்டை புருகுபள்ளி வட்டாரத்தில் முப்பரிமாண அச்சிடல் முறையில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். உலகிலேயே இந்த முறையில் கட்டப்பட்டுள்ள முதல் கோயில் இது.
இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க ஏறக்குறைய மூன்று மாதங்கள் பிடித்ததாகக் கூறப்பட்டது.
4,000 சதுர அடி பரப்பளவில் 35.5 அடி உயரமுள்ள கோபுரங்களுடன் அமைந்துள்ள இக்கோயிலில் பிள்ளையார், சிவன், பார்வதி ஆகிய தெய்வங்களுக்கு மூன்று கருவறைகள் கட்டப்பட்டுள்ளன .
மோதகம் எனப்படும் கொழுக்கட்டை வடிவில் பிள்ளையாருக்கும் சதுர வடிவில் சிவனுக்கும் தாமரை வடிவில் பார்வதி தேவிக்கும் கருவறைகள் கட்டப்பட்டுள்ளன.
கோபுரங்களும் கருவறைகளும் ‘3டி’ எனப்படும் முப்பரிமாண அச்சிடல் முறையில், உள்நாட்டுப் பொருள்களையும் மென்பொருளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

