ஆதித்யா விண்கலம் ஜனவரி 7ம் தேதி சூரியனின் எல்-1 சுற்றுப்பாதையில் நுழையும்

1 mins read
e28bd9ea-2999-4e1e-b4ee-19041dda438b
இஸ்ரோ தலைவர் சோம்நாத்.  - கோப்புப்படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து கடந்த செட்பம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா விண்கலம். இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

ஆதித்யா விண்கலத்தை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விஞ்ஞானிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். அந்த விண்கலம் இப்போது சீரான வேகத்தில் சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிச் செல்வதாகவும் அது ஜனவரி 7ஆம் தேதி அப்பகுதிக்குள் நுழையும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் சோம்நாத் தெரிவித்தார்.

ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சுற்றுப்பாதையில் வலம்வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்