‘நிமோனியா’ தொடர்பில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் மாநிலங்கள்

‘நிமோனியா’ தொடர்பில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் மாநிலங்கள்

1 mins read
3433958c-ae84-4abf-997b-b8083a1f096d
சீனாவில் பரவிவரும் நிமோனியா தொற்றை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்கள் தத்தம் மருத்துவமனைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாகச் செய்தி வெளியாகிய நிலையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் மருத்துவமனைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் உச்ச விழிப்புநிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகாவில் பருவகால சளிக்காய்ச்சல் கிருமியின் பாதிப்பை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, மருந்துகள், சுவாசவாயு உள்ளிட்டவற்றைப் போதுமான அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்