மத்திய ரிசர்வ் வங்கி: ரூ. 2,000 நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன

புதுடெல்லி: மீட்டுக் கொள்ளப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் இன்னமும் வங்கிகளிடம் ஒப்படைக்கப் படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19 ஆம் தேதி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இந்த நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த பிறகு நவம்பர் 30ஆம் தேதியின் முடிவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 9,760 கோடி ரூபாய்க்கான நோட்டுகள் மக்களிடம் மீதம் உள்ளன,” என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 2,000 ரூபாய் தாள்களை மாற்ற விரும்புபவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களையும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!