புலியை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஓட்டம் பிடித்த ஆடவர்

புலியை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஓட்டம் பிடித்த ஆடவர்

1 mins read
5fe332ed-5c5b-4cac-9a11-b601c7d542f5
உத்தராகண்ட் தேசிய பூங்காவுக்கு வெளியே சாலையைக் கடக்கும் புலி. - படம்: காணொளிக் காட்சி

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய பூங்காவான ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு புலிகள் மட்டுமின்றி மான்கள், யானைகள், கரடி உள்ளிட்ட பல விலங்கினங்களும் உள்ளன.

இந்நிலையில் தேசிய பூங்காவுக்கு வெளியே உள்ள சாலையில் ஒருவர் நடந்து கொண்டிருக்கையில், ஒரு புலி நேருக்கு நேர் அவரை நோக்கி நடந்து வந்தது. அதைக் கண்ட அந்த ஆடவர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். ஆனால், அந்தப் புலியோ அங்கிருந்த சாலையைக் கடந்து அருகேயிருந்த புதருக்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்