இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், 2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து வாகனங்களின் விலை உயர்த்தவுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக வாகனங்களின் விலை 3% வரை உயர்கிறது.
வாகன உற்பத்திகான செலவு அதிகரிப்பு, மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் வாகனங்களின் விலை ரூ.5.6 லட்சம் முதல் ரூ.25.94 லட்சம் வரை உள்ளது.
மாருதி சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா, ஹோண்டா, ஆவ்டி போன்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.