மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஜார்ஹன் என்னும் சிற்றூரில் வெடி பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இத்தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென வெடிபொருள்கள் வெடித்து சிதறின.
இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த 9 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
மேலும், படுகாயமடைந்தவர்களை காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியப் பாதுகாப்புத் துறைக்காக இந்தத் தொழிற்சாலையில் வெடிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

