உணவக ‘சாலட்டில்’ உயிருடன் நத்தை

உணவக ‘சாலட்டில்’ உயிருடன் நத்தை

தாவல் சிங்/எக்ஸ் காணொளி

17 Dec 2023 - 6:33 pm

1 mins read

பெங்களூரு: பெங்களூரு நகரில் உள்ள லியோன்கிரில் எனும் உணவகத்திலிருந்து ‘ஸ்விக்கி’ உணவு விநியோகச் சேவை மூலம் காய்கறி ‘சாலட்’ தருவித்தார் தாவல் சிங் எனும் ஆடவர்.

ஆனால் அவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி! பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தால் ‘சாலட்’டில் உயிருடன் நத்தை ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது.

அதைக் காணொளியாக எடுத்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் திரு சிங்.

அத்துடன் தான் கேட்டிருந்த பானத்தையும் உணவகத்தினர் மாற்றி அனுப்பியிருந்ததாக தன் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புகார் கூறியதும் முதலில் ‘ஸ்விக்கி’ சிறிதளவு பணத்தைத் திருப்பித் தந்ததாகவும் பின்னர் முழுத் தொகையையும் தந்ததாகவும் அவர் கூறினார்.

‘ரெட்டிட்’ தளத்திலும் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார். சில மணி நேரத்திற்குள் 18,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது அப்பதிவு.

பதிவில் கருத்துரைத்த இணையவாசிகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்