மும்பை தாக்குதல் சந்தேக நபரை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை

மும்பை தாக்குதல் சந்தேக நபரை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை

1 mins read
a1a76095-3514-419f-8b4f-ed81f7ea061a
ஹஃபீஸ் சையது. - கோப்புப் படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: இந்தியாவின் மும்பை நகரில் 2008ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபராகச் சந்தேகிக்கப்படும் ஹஃபீஸ் சையதை ஒப்படைக்கும்படி இந்தியா பாகிஸ்தானிடம் கோரியுள்ளது.

ஹஃபீஸ் சையதை இந்தியாவில் விசாரிக்க வேண்டும் என்று அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிண்டம் பஃக்சி கூறினார். டிசம்பர் 29ஆம் தேதி செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

“உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்று திரு பஃக்சி கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்