ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான இன்று காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இதில், எக்ஸ்போ சாட் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் உள்ள தூசு, நிறமாலை, வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போ சாட் ஆராய உள்ளது.
திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைக்கோளும் இதனுடன் இணைத்து ஏவப்படுகிறது.
மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதனிடையே, ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதைப் பார்ப்பதற்காக மாணவர்கள், பொதுமக்கள் என 10,000 பேர் தங்கள் பெயர்களைப் பதிந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

