மிசோரமுக்கு தப்பி வந்த மியன்மார் வீரா்கள்

1 mins read
a6820bfb-7e6d-45c8-8d00-a4bb774b7bdc
மியன்மார் நாட்டைச் சேர்ந்த 151 ராணுவ வீரர்கள் அடைக்கலம் தேடி மிஸோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்திற்கு வந்தடைந்தனர். - படம்: இபிஏ

மிசோரம்: மியன்மார் நாட்டு ராணுவ வீரர்களின் முகாமை ஆயுதம் ஏந்திய இனக் குழுக்கள் கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தப்பித்த 151 ராணுவ வீரா்கள் அனைத்துலக எல்லை வழியாக மிசோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்திற்கு வந்தடைந்தனர்.

இதை அசாம் காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.

அவர்களில் சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் மியன்மார் வீரர்களைத் திருப்பி அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்