தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் நிரந்தரத் தீர்வே பாதுகாப்பு தரும்: ஜெய்சங்கர்

2 mins read
f7a650ea-699e-4900-bf11-057ede745341
ஜெய்சங்கர். - படம்: ஊடகம்

காஸா: காஸா பகுதியில் தற்போது நிலவும் சூழலைப் புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காஸா முனைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினைக்கு நிரந்தரத் தீா்வு காண்பதன் மூலமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி பாதுகாப்பை வழங்க முடியும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

உகாண்டா தலைநகா் கம்பாலாவில் அணிசேரா இயக்க நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத நடவடிக்கைகளையும் பிணைக் கைதிகளாக பொதுமக்களை பிடித்துச் செல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், அதே சமயத்தில் அனைத்து நாடுகளும் மனிதாபிமான சட்டங்களை மதித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு உள்ளேயும் அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளுக்கும் இப்பிரச்சினை பரவாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

“பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லையில் வசிப்பதற்கு ‘இரு தனி நாடுகள்தான் தீா்வாக இருக்கும். அதை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்,” என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

தமது பயணத்தினூடே பொலிவியா, அஸர்பைஜான், வெனிசுலா நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடர்பாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளியல், எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் மேற்கண்ட நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சா்களுடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய, வட்டார விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்