அயோத்தி கோயில் வழிபாட்டு நேரம்

1 mins read
801e6ce0-0fe4-42b1-844c-4bf5c1957717
ராமர் கோயிலில் கூடிய பக்தர் கூட்டம். - படம்: ஏஎஃப்பி

அயோத்தி கோயிலில் உள்ள ராமரை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். ஒரு நாளைக்கு 300,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 7 மணிவரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். 

காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடத்தப்படும் சிறப்புப் பூசையைக் காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையத் தளத்தில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில் திறக்கப்பட்ட சில நாள்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் பட்சத்தில் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்