தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரல் 16ல் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் யோசனை

1 mins read
5aa7189d-3bdd-4782-b442-c319ef09a8ea
ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. - கோப்புப் படம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 16ம் தேதி முதல் பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலை அனுப்பியதாக கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

17வது நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் 18வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்