தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவியின் மூக்கை அறுத்த கணவர்

1 mins read
e96b3f09-7b6b-4286-9c32-acc6abfc187e
குடும்ப தகராறு காரணமாக துக்க வீட்டிற்குச் சென்றிருந்த மனைவியின் மூக்கை அறுத்த கணவன். - படம்: தமிழக ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய 48 வயதான மனைவியின் பெயர் சுதா.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுதா தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர் வீட்டுக்கு சுதா சென்றார். இதையறிந்து அங்கு வந்த அனில்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் வைத்திருந்த கத்தியால் மனைவியை அனில்குமார் குத்த முயன்றார்.

அப்போது சுதாவின் மூக்கில் கத்தி பட்டு படுகாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அனில்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மூக்கு அறுபட்ட நிலையில் சுதா திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போத்தன் கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அனில்குமாரைத் தேடி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்