சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடும் போட்டி: 309 பேர் விண்ணப்பம்

சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடும் போட்டி: 309 பேர் விண்ணப்பம்

1 mins read
38209667-21ea-4047-a00d-2c99eeb3aefc
படம்: - இந்திய ஊடகம்

தெலுங்கானா: தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோர் மேடக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்.

மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பு பெற போட்டி போட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் 17 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட 309 பேர் விருப்பம் தெரிவித்து மனு அளித்து உள்ளனர்.

ஒரு சில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய பலத்தைக் காண்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஊர்வலமாக சென்று விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

இதேபோல் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேல் இடத்திற்கு அனுப்பி வைத்து அதில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தெலுங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவி வருவதால் பரபரப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்