தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிஜத்தில் ‘3 இடியட்ஸ்’ காட்சி

1 mins read
772ed444-d045-479b-a438-dc30f536d731
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் மோட்டார்சைக்கிளில் சென்று சிகிச்சை தேவைப்பட்ட தனது தாத்தாவை இறக்கிவிட்ட ஆடவர். - காணொளிப் படம்: என்டிடிவி / ஃபேஸ்புக்

சாத்னா: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓர் ஆடவர், மோட்டார்சைக்கிளில் தனது தாத்தாவை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் கொண்டு சென்றார்.

மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் இருந்த தாத்தாவை வேறொரு நபர் பிடித்து வந்தார்.

இந்தி நடிகர் அமீர் கானின் ‘3 இடியட்ஸ்’ எனும் பிரபல திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியைப் போன்றே சனிக்கிழமையன்று (பிப்ரவரி 10 ) நிஜத்திலும் நடந்தது. ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழாக்கமான விஜய் நடித்த ‘நண்பன்’ திரைப்படத்திலும் இப்படிப்பட்ட காட்சி இடம்பெற்றது.

சாத்னா நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மாவட்ட மருத்துவமனையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சாத்னா, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலுக்கு சுமார் 450 கிலோமீட்டர் அப்பால் உள்ளது.

சனிக்கிழமை இரவு நீரஜ் குப்தா என்ற ஆடவரின் தாத்தாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அவர் சாத்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் நடுவில் அந்த ஆடவர் தனது தாத்தாவை இறக்கிவிடுவது காணொளியில் பதிவு செய்யப்பட்டது. நீரஜ் குப்தாவைப் பின்தொடர்ந்த பாதுகாவல் அதிகாரி சம்பவத்தைக் காணொளியில் பதிவுசெய்தார்.

குறிப்புச் சொற்கள்