தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் உள்பட 13 மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு

1 mins read
61b10dde-7bce-45a7-b1f9-660eec22c3f3
இந்திய அரசின் ஆயுதப்படை - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இதுவரையில் இந்தி, ஆங்கில மொழிகளிலேயே நடத்தப்பட்டு வந்ததால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். பல்வேறு தரப்பிலும் இருந்து வந்த தொடர் கோரிக்கைகளை அடுத்து, 13 மாநில மொழிகளில் மத்திய ஆயுதப்படை தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்