பெங்களூரு: போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் வழக்கமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வருவதைப் பார்த்துவிட்டனர்.
விதிமீறலுக்காக இளைஞரைத் தடுத்து நிறுத்தியபோது தன் உறவினருக்கு உடல் நலமில்லை என்றும் அவரைப் பார்க்கத் தான் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்வதாகவும் அந்த இளைஞர் கூறினார்.
இருப்பினும், இளைஞரின் வாகனச் சாவியை எடுத்துவைத்துக் கொண்டார் அதிகாரி.
ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அதிகாரியின் கையைப் பிடித்துக் கடித்துவிட்டார். அதிகாரி வலியில் துடிக்க, மற்ற அதிகாரிகள் விரைந்து வந்து அவருக்கு உதவினர்.
இதையடுத்து, பணியில் இருந்த அதிகாரியைத் தாக்குதல், பணியைச் செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இளைஞர் மீது வழக்குப் பதிவானது.
இளைஞரின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

