விண்வெளியில் வானிலை ஆய்வு

விண்வெளியில் வானிலை ஆய்வு

1 mins read
6bf397d4-699c-4096-80e6-e3d837632f76
பேரிடர் எச்சரிகைத் தகவல்களை முன்கூட்டியே அனுப்பும் செயற்கைக்கோளை ஏந்தி உந்துகணை விண்ணில் பாய்ந்தது. - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து சனிக்கிழமை (பிப்ரவரி 17) மாலை இந்திய நேரப்படி 5.35 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப்-14 உந்துகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது.

இந்த உந்துகணையில் ‘இன்சாட்-3டி எஸ்’ எனும் செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ வடிவமைத்து வைத்துள்ளது.

இது, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைத் தகவல்களை முன்கூட்டியே கணித்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்