தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்வு எழுதவிருந்த மாணவர் புலிக்கு இரையானார்

1 mins read
89cf44bf-3aaa-42de-9200-80c255449c3e
படம்: - ஏஎஃப்பி

பிலிபிட்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதப் படித்துக்கொண்டிருந்த 18 வயது மாணவரைப் புலி கொன்றது.

இந்த துயரச் சம்பவம் பில்பிட் வட்டாரத்தின் பண்டரி கிராமத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 19) பிற்பகல் நான்கு மணிக்கு நிகழ்ந்தது.

பங்கஜ் என்ற பெயரைக் கொண்ட 18 வயது இளையர், வியாழக்கிழமை (பிப்ரவரி 22) தொடங்கவிருக்கும் அரசு தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருந்தார். கழிவு கழிப்பதற்காக சிறிது நேரம் வெளியே சென்ற அவரைப் புலி தாக்கிக் கொன்றது.

மாலா, மஹோஃப் வனப் பகுதிகளின் சந்திப்புக்கு மூன்று கிலோமீட்டர் அப்பால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பில்பிட் புலிப் பாதுகாப்புப் பகுதியின் வன அதிகாரிகளில் ஒருவரான நவீன் கண்டெல்வால் கூறினார்.

மாண்ட இளையரின் குடும்பத்துக்கு இழப்பீடாக 500,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் 400,000 ரூபாயும் வனத்துறை சார்பில் 100,000 ரூபாயும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்