பெயர் அறிவித்தும் போட்டியிட மறுத்த பா.ஜ.க. வேட்பாளர்

கோல்கத்தா: பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் போஜ்புரி பாடகர் பவன்சிங் பெயர் இடம்பெற்றிருந்தது. போஜ்புரி மொழிப் பாடகரும் நடிகருமான பவன் சிங் சில காரணங்களால் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் அசன்சோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான பவன் சிங் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள சம்பவம் பாஜக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 34 மத்திய அமைச்சர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

“பவான் சிங், பெங்காலிப் பெண்களை ஆபாசமாக சித்திரித்துப் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அதனால்தான், பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது,” என்று திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், போஜ்புரி பாடகரும் நடிகருமான பவான் சிங் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!