தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தையைத் தவறுதலாக 3வது மாடியிலிருந்து கீழே போட்ட தந்தை

1 mins read
a027782a-c10f-4d63-92ed-9636f0ad8b64
கடைத்தொகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் சம்பவம் பதிவாகியிருந்தது. - படம்: இணையம்

புதுடெல்லி: கடைத்தொகுதிக்குச் சென்ற ஒரு குடும்பத்திற்குப் பெருந்துயரம் காத்திருந்தது.

தனது ஒரு வயது குழந்தையைத் தூக்கியிருந்த ஒரு தந்தை, தவறுதலாக அதை மூன்றாவது மாடியிலிருந்து கீழே போட்டுவிட்டார்.

குழந்தை சுமார் 40 அடி உயரத்திலிருந்து விழுந்து மாண்டது.

சத்தீஸ்கரின் ராஜ்பூரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் கடைத்தொகுதியில் இந்த அவலச் சம்பவம் நடந்தது.

மின்படிகளில் 5 வயது என நம்பப்படும் இன்னொரு பிள்ளை செல்வதை அந்தத் தந்தை தடுக்கப் போய், தடுமாறித் தன் கைகளிலிருந்த குழந்தையை நழுவவிட்டார்.

இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
விசாரணைகுழந்தைஉயிரிழப்புதந்தை