உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயிலில் தீ: 13 பேர் காயம்

உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயிலில் தீ: 13 பேர் காயம்

1 mins read
7730bc38-ebf1-46f8-8168-478c5a584a12
காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலில் இந்திய நேரப்படி மார்ச் 25ஆம் தேதி காலை, கோயில் கருவறையில் பஸ்ம ஆராத்தி சடங்கு இடம்பெற்றபோது தீ மூண்டது.

தீ மூண்டபோது கோயிலில் பக்தர்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

தீச்சம்பவம் காரணமாக 13 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

காயம் அடைந்தோர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் சிங் தெரிவித்தார்.

அவர்களில் இருவர் உஜ்ஜைனில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்