காவிரி நீரில் கார் கழுவியதால் ரூ.5,000 அபராதம்

காவிரி நீரில் கார் கழுவியதால் ரூ.5,000 அபராதம்

1 mins read
0e01c252-2e7a-438c-8f89-f5fcaddd8663
சித்திரிப்பு: - பிக்சாபே

பெங்களூரு: தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வேளையில், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் தங்களின் கார்களைக் கழுவ, காவிரி நீரைப் பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

‘பெங்களூரு ஜல் மண்டல்’ நிறுவனம் அவர்களுக்கு அவ்வாறு அபராதம் விதித்தது.

“கடந்த ஆண்டு மழையின்மையால், அனைத்து அணைகளிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும்,” என்று பெங்களூரு மாநகராட்சியும் பெங்களூரு ஜல்மண்டல் நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில், சதாசிவ நகர், மகாதேவபுரா, டாலர்ஸ் காலனியில் தங்கள் கார்களை காவிரி நீரில் கழுவிய பெண் உட்பட மூவருக்கு, தலா 5,000 ரூபாயை ஜல் மண்டல் நிறுவன அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.

குறிப்புச் சொற்கள்