இந்தியாவில் 22.5 லட்சம் யூடியூப் காணொளிகள் நீக்கம்

இந்தியாவில் 22.5 லட்சம் யூடியூப் காணொளிகள் நீக்கம்

1 mins read
4fab81b8-adfb-477f-9d3a-85cd758b62ea
விதிமுறைகளை மீறியதாக 2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இந்தியாவில் 22.5 லட்சம் காணொளிகளை யூடியூப் நீக்கியுள்ளது - படம்: இணையம்

புதுடெல்லி: யூடியூப் விதிமுறைகளை மீறியதாக 2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இந்தியாவில் 22.5 லட்சம் காணொளிகளை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது. காணொளிகள் நீக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

விதிமுறைகளை மீறும் வகையில் விளம்பரம் அல்லது பாலியல் ரீதியிலான கருத்துகள் உள்ளதால் அந்தக் காணொளிகள் நீக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் 7,88,354 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன.

உலகளவில் 90 லட்சம் காணொளிகள் நீக்கப்பட்டு உள்ளன. அதில், 96 விழுக்காடு காணொளிகள் யாரும் பார்ப்பதற்கு முன்னரே நீக்கப்பட்டன. மேலும் விதிகளை மீறியதாக 2 கோடி சேனல்கள் நீக்கப்பட்டு உள்ளதுடன் 100 கோடி வாசகர்கள் கருத்துகளையும் அந்த நிறுவனம் நீக்கி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்