தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்குரிமை பெற்ற முதல் இலங்கை அகதி

1 mins read
b36836d5-bcc8-45a8-bf54-846865f50c67
நளினி கிருபாகரன் - படம்: இந்திய ஊடகம்

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது நளினி கிருபாகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.

நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. இவர் கடந்த 198ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த வாக்கு உரிமைக்கான அவரது பயணம் 2021ல் தொடங்கியது. முதலில் இந்திய கடவுச்சீட்டுக்கான அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார்.

2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவருக்கு இந்தியக் கடவுச்சீட்டை வழங்க உத்தரவிட்டது.

தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை நளினி பெற்றார்.

“மாநிலம் முழுவதும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யும் கட்சிக்கு நான் வாக்களிப்பேன் மேலும் இந்தியாவில் பிறந்த எனது இரு குழந்தைகளுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்,” என்றார் அவர்.

நளினியின் வழக்கை உயர்நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் ரோமியோ ராய், நளினி போன்று முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் விரலில் மை பூசுவதை உறுதி செய்யும் பணி தொடரும் என்றார்.

குறிப்புச் சொற்கள்