எக்ஸ் தளத்திலிருந்து 231,000 இந்தியர் கணக்குகள் நீக்கம்

எக்ஸ் தளத்திலிருந்து 231,000 இந்தியர் கணக்குகள் நீக்கம்

1 mins read
cf3d9fff-e63f-43c1-b8cd-f395030ba3c7
குழந்தைகள் ஆபாச படம் உள்ளிட்ட மீறல்கள்: இந்தியாவில் 2.31 லட்சம் எக்ஸ் கணக்குகள் நீக்கம் - படம்: இணையம்

மும்பை: சமூக வலைத்தளமான எக்ஸ் தளம் ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்து 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 முதல் இந்த ஆண்டு ஜனவரி 25 வரையிலான ஒரு மாத காலத்தில், சிறார் ஆபாசப் படங்களை பகிர்வது, அனுமதியின்றி எடுக்கப்பட்ட நிர்வாணப் படங்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் கணக்குகளை எக்ஸ் சமூக வலைத்தளம் நீக்கியுள்ளது.

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளின்படி பதிவான 2,525 புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்டவற்றில் 1,945 கணக்குகள் தங்கள் பக்கங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து பதிவிட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்