ஜீலம் ஆற்றில் படகு விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு

ஜீலம் ஆற்றில் படகு விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு

1 mins read
27de2655-a2db-4320-9e38-721ee2f4d38c
மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் செவ்வாய்க்கிழமையன்று படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் படகு கவிழ்ந்ததாகவும் படகில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட பல பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆற்றில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ள சூழலில் இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

“12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அதில் 6 பேர் மாண்டனர், மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
படகுவிபத்து