பயணச்சீட்டு இல்லாத பெண் ரயில் இருக்கையைவிட்டு விலக மறுத்தார்

பயணச்சீட்டு இல்லாத பெண் ரயில் இருக்கையைவிட்டு விலக மறுத்தார்

படம்: ஐஏஎன்எஸ்

20 Apr 2024 - 4:56 pm

1 mins read

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பெண் ஒருவர், தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருந்த ஓர் இருக்கையை விட்டு விலக மறுத்தார்.

தன்னை இருக்கையை விட்டு வெளியேறுமாறு பலமுறை கூறிய சக பயணிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார்.

ஒரு கட்டத்தில், அவர் தன்னை ஒரு ரயில்வே ஊழியர் என்றும் கூறிக்கொண்டார். அதன் அடிப்படையில் இருக்கைக்கு அவர் ‘உரிமை’ கொண்டாடினார். முழுச் சம்பவமும் கண்காணிப்புக் கருவியில் பதிவானது.

‘எக்ஸ்’ சமூக வலைத்தள பயனர் ஷோனி கபூர், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) அந்தக் காணொளியைப் பகிர்ந்தார். அது, சமூக ஊடகப் பயனர்களைக் கோபமடையச் செய்தது மட்டுமல்லாமல், இந்திய ரயில்வேயிடமிருந்து பதிலையும் தூண்டியது.

சம்பவம் நடந்த தேதியும் இடமும் தெரியவில்லை. அக்காணொளி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

பயணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கான ‘ரயில்வே சேவா’, கூடுதல் விசாரணைக்காக சம்பவம் குறித்து மேல்விவரங்களைக் கேட்டது.

குறிப்புச் சொற்கள்